Home /News /tamil-nadu /

தங்கம்.. முதலீடு.. சொத்து குவிப்பு - சூப்பர் சரவணா ஸ்டோர் ஐடி ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

தங்கம்.. முதலீடு.. சொத்து குவிப்பு - சூப்பர் சரவணா ஸ்டோர் ஐடி ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த நிலையில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான பெரும்பான்மையான இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

வரி ஏய்ப்பு தொடர்பாகவும் வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் பணத்தை தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்ததால் கடந்த 1ஆம் தேதி காலை 8.30 மணியிலிருந்து நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

Also Read:  தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையானது பெரும்பான்மையான இடங்களில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் நிறைவடைந்தது. புரசைவாக்கம் பகுதியில் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 3 இடங்கள் மற்றும் தி.நகரில் 3 இடங்களில் முடிவடைந்த சோதனை முடிவடைந்த நிலையில் மீதமுள்ள இடங்களில் சோதனை தொடர்கிறது.

சோதனை முடிந்த இடங்களில் அதிக அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதும் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் தங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் மேலும் பல்வேறு பகுதிகளில் இடங்கள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த சோதனை தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Income tax, Income Tax raid, Legend Saravanan, Saravana stores, Saravana Stores saravanan, Tamil News

அடுத்த செய்தி