சென்னையில் காரில் வந்து ஆட்டை திருடிச் சென்ற ஜோடி! வெளியான சிசிடிவி வீடியோ

ஆடு திருடிச் செல்லும் ஜோடி

ஆணும் பெண்ணும் ஆடு திருட காரில் வந்ததை எண்ணி வியப்புற்ற போலீசார், காரின் எண்ணை வைத்து இருவரையும் தேடி வருகின்றனர்.

 • Share this:
  சென்னையில் சாலையோரம் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை காரில் வந்த ஒரு ஜோடி திருடிச் சென்ற காட்சி வெளியாகியுள்ளது.

  மட்டனுக்கு எப்போதுமே கிராக்கி என்பதால் ஆடுகளுக்கு என்றென்றைக்கும் மவுசு அதிகம்தான். அதனால்தான் சென்னை போன்ற நகரப்பகுதிகளில் கூட ஆடு திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சென்னை கொரட்டூர் போத்தியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் இந்திராணி. இவர் தனது வீட்டு வாசலில் கட்டியிருந்த வளர்ப்பு ஆட்டைக் காணவில்லை என கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போத்தியம்மன் தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது காரில் வந்த இருவரின் கைவரிசை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நள்ளிரவில் இந்திராணி வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்பதும், அதில் இருந்து கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் அவருடன் ஒரு ஆணும் கீழே இறங்கி தெருவை நோட்டமிடும் காட்சியும் பதிவாகியுள்ளது. சில விநாடிகள் கழிந்தபின், கட்டியிருந்த ஆட்டை வேக வேகமாக அவிழ்த்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

  அந்த ஆணும் பெண்ணும் ஆடு திருட காரில் வந்ததை எண்ணி வியப்புற்ற போலீசார், காரின் எண்ணை வைத்து இருவரையும் தேடி வருகின்றனர். காரில் வந்த பெண்ணிடம் கைக்குழந்தையும் இருந்ததால் கணவன் - மனைவியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: