சென்னையில் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி ஆம்புலன்ஸ் சேவை செய்யும் சமூக நல அறக்கட்டளை!

ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோ

இந்த சேவையை இவர்கள் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை 160 நோயாளிகளுக்கு அவசர நிலையில் உதவியுள்ளார்கள்.

 • Share this:
  வடசென்னையில் சமூக நல அறக்கட்டளை என்ற அமைப்பு ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறது. இந்த சேவை அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

  இதனிடையே, கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் சமூகநல அறக்கட்டளை சார்பில் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி ஆம்புலன்ஸ் சேவையை மக்களுக்காக தொடங்கியுள்ளனர். வடசென்னை பகுதி பொது மக்களிடம் இந்த சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வட இந்தியாவில் இந்த கொரோனா தொற்றுநோயால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலை தமிழகத்தில் குறிப்பாக வட சென்னையில் இருக்க கூடாது என்று ஒரு நோக்கத்துடன் இந்த சேவையை இவர்கள் தொடங்கியுள்ளனர்.

  இந்த சேவையை இவர்கள் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை 160 நோயாளிகளுக்கு அவசர நிலையில் உதவியுள்ளார்கள். இந்த சேவையில் பட்டதாரி மாணவர்கள் முதற்கொண்டு ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவசர காலத்தில் பொதுமக்கள் அவர்கள் கொடுத்துள்ள எண்ணை தொடர்பு கொண்டால், அடுத்த சில நிமிடங்களிலே அந்த இடத்தில் சென்று அவர்களுக்கு ஆட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சிஜன் வழங்கி மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்ப்பது இவர்களுடைய பணியாக இருக்கிறது.

  இந்த சேவையில் ஈடுபட்டுள்ள வசந்தகுமார் என்ற பொறியியல் மாணவர் கூறும்போது, மருத்துவம் பத்தி எங்களுக்கு முழுமையாக தெரியாது. நாங்கள் பொறியியல் மாணவர்கள். ஆனால், ஓரளவுக்கு முதலுதவி செய்யும் பக்குவம் எங்களுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்  செயல்பட்டு வருகிறோம்.

  ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் தொடர்பு கொண்டால் அவசர நிலையில், யார் உள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களை முதலில் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறோம் என்று அவர் கூறினார்.

  செய்தியாளர் - அசோக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: