• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மாமியாருடன் கள்ளத்தொடர்பு.. கார் விற்பனையாளரை அடித்துக்கொன்ற மருமகன் கைது

மாமியாருடன் கள்ளத்தொடர்பு.. கார் விற்பனையாளரை அடித்துக்கொன்ற மருமகன் கைது

சென்னை பாடியில் நடந்த கொலை

சென்னை பாடியில் நடந்த கொலை

மாமியாருடன் கள்ளதொடர்பு வைத்திருந்த நபரை அவரது மருமகன் அடித்துக்கொன்ற சம்பவம் சென்னை பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    மாமியாருடனான கள்ளத்தொடர்பை துண்டிக்காத கார் விற்பனையாளரை மருமகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை கொரட்டூர் அடுத்த பாடி, கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (40). இவர் கார், ஆட்டோ வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில்,
    கோபிக்கும் கொரட்டூர், காமராஜர் நகரில் வசிக்கும் ராணி (வயது 40)  என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராணியின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.
    மேலும், கோபியுடன் ராணிக்கு இருந்த கள்ளத்தொடர்பை அவரது மருமகனும்,  கொரட்டூர், சாவடி தெருவில் வசிக்கும் நந்தகுமார் (22) என்பவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, நந்தகுமார் பலமுறை கோபியை கண்டித்து வந்து உள்ளார். இருந்த போதிலும், ராணியுடன் இருந்த கள்ளதொடர்பை கோபி துண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த 22 ந்தேதி இரவு ராணி வீட்டிற்கு கோபி வந்துள்ளார். இதனை தெரிந்து, அங்கு நந்தகுமார் வந்துள்ளார். பின்னர்,  கோபிக்கும் நந்தகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த நந்தகுமார், கோபியை சரமாரியாக முகத்தில் குத்தி உள்ளார். அவருக்கு மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரை  மீட்ட ராணி மாலை6மணி அளவில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    அங்கு கோபிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில், கோபியின் தாயார் சூர்யா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் நந்தகுமாரை நேற்றுமுன்தினம் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அவரை பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, போலீசார் மேற்கண்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன் 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: