Home /News /tamil-nadu /

‘உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்’ - மழுப்பிய இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்

‘உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்’ - மழுப்பிய இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்

கைதான கார்த்திக்

கைதான கார்த்திக்

Chennai கேளம்பாக்கத்தை சேர்ந்த பெண் கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    திருமணமான பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவில்  வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஷாயின்ஷா(வயது 26). திருமணம் முடிந்து கணவர் இறந்த நிலையில் 12 வயதில் ஒரு மகன், 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஷாயின்ஷாவின் அம்மா மற்றும் 2 மகன்கள் உடன் வாடகை வீட்டில் கடந்த 10 நாட்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் ஷாயின்சா கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாயின்சாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூறு ஆய்வில் ஷாயின்சா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து 2 தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கினர்.

    Also Read:  மருமகளிடம் அத்துமீறிய மாமனார் - அடங்காத தந்தையை அடித்துக்கொன்ற மகன்

    முதற்கட்ட விசாரணையில் முதல் திருமணம் முடிந்து கண்ணகி நகர் பகுதியில் வசித்து வந்தபோது அங்கு பல நபர்களுடன் ஷாயின்சா கள்ளத் தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் முதல் ஆண் குழந்தை பிறந்து சிறுவயதிலேயே  கணவன் இறந்துள்ளார்.முதல் கணவர் இறந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ஷாயின்சா மற்றொரு ஆண் குழந்தை பிறந்த சிறுவயதிலேயே இரண்டாவது கணவரும் இறந்துள்ளார்.

    இந்நிலையில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கள்ளதொடர்பில் ஷாயின்சா இருப்பதாகவும் கார்த்திக் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் கார்த்திகை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டிருந்த நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

    Also Read:  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் திருடனான ரயில்வே ஊழியர்.. திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் நடந்தது என்ன

    பின்னர் தனிப்படை போலீசார் மடிப்பாக்கம் சென்று கார்த்திக்(19) மற்றும் அவரது நண்பன் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(21) ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணையில் ஈடுபட்டதும் கார்த்திக்கின் அண்ணன் விஜய் என்பவருக்கும் ஷாயின்சாவிற்கும் பழக்கம் உள்ள நிலையில்  விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சகோதரரின் சாவுக்கு ஷாயின்சா காரணமாக இருக்கலாம் என எண்ணிய கார்த்திக் கொலை நடைபெற்ற அன்று அவரது நண்பர் ஆனந்த் உடன் மது அருந்திவிட்டு ஷாயின்சா வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஷாயின்சாவிடம் பேசிக்கொண்டிருந்த போது தனது சகோதரரின் மரணம் பற்றி பேசும்போது அதை பற்றி பேசாமல் வேறு கதையை பேசி திசை திருப்பியுள்ளார். சந்தேகம் வலுத்த கார்த்திக்கு மீண்டும் சகோதரரின் மரணம் குறித்து கேட்டபோது அண்ணனுக்கு நேர்ந்ததுபோல் உனக்கும் நேரிடும் என்று கூறி மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்ததாக கூறினர்.

    Also Read: சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா சிக்கியது: 4 பேர் கைது

    மது அருந்திவிட்டு சென்றிருந்த கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர் ஆனந்த் இருவரும் ஷாயின்சாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அண்ணனின் தற்கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் துணியால் ஷாயின்சாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: வினோத்கண்ணன்

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chengalpattu, Chennai, Crime | குற்றச் செய்திகள், Death, Kelambakkam police station, Sexual abuse, Sexual harassment, Tamil News

    அடுத்த செய்தி