• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழப்பு; இறுதி வரை பிரியாத அன்பு

சென்னையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழப்பு; இறுதி வரை பிரியாத அன்பு

மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழப்பு

மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவனும் உயிரிழப்பு

சென்னையில் உயிரிழந்த மனைவிக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு கணவனும் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share this:
    சென்னையில் உயிரிழந்த மனைவிக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு கணவனும் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (68),  மூர்த்தி (75), தம்பதியர் சென்னையை பூர்வீகமாக கொண்டு பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களுக்கு 6  பிள்ளைகள்
    சரவணன் (52), குமார் (46), ராமு (43) , லலிதா (50), தேவி (43)  புவனேஸ்வரி (40). இவர்களின் தாயார் ராஜேஸ்வரி அவர்கள் கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் உடல் நல குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மாலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் கொரோனா பரிசோதனை முடிந்து நேற்று மாலை 5 மணிக்கு கொண்டுவரப்பட்டு இன்று காலை 10 மணி அளவில் சடங்குகள் செய்து பாடியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன.

    கணவர் மூர்த்தி அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை செய்து முடித்தார். பின்னர் முகப்பேர் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ராஜேஸ்வரி அவர்களின் உடல் எடுத்து  செல்லப்பட்டது. அதே நேரத்தில் கணவர் மூர்த்தியும் வீட்டில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரி அவர்களின் உடல் அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்ட அதே  மயானத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, மூர்த்தியின் உடலுக்கும் உறவினர்கள் சடங்குகளை செய்து இருவரையும் ஒரே நேரத்தில் தகனம்செய்தனர்.

    மூன்று மகள், மூன்று மகன்களை பெற்று வளர்த்து அவர்களை நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்த முதிய தம்பதியர் ஒரே நேரத்தில் மரணித்து, ஒரே நேரத்தில் அடக்கம் செய்யப்பட்டது முகப்பேர் மேற்கு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் - கண்ணியப்பன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: