Home /News /tamil-nadu /

மனைவி பிறந்தநாளை மதுவுடன் கொண்டாடிய கணவன்.. கூட்டாளியுடன் சிக்கிய பரிதாபம்

மனைவி பிறந்தநாளை மதுவுடன் கொண்டாடிய கணவன்.. கூட்டாளியுடன் சிக்கிய பரிதாபம்

சென்னை பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை பிறந்தநாள் கொண்டாட்டம்

Chennai மதுபோதையில் தகராறு செய்து அந்த தெருவில் நிறுத்தியிருந்த வாகனங்களை கட்டையால்  உடைத்தது விசாரனையில் தெரியவந்தது.

    மதுரவாயலில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட ஆசைப்பட்டு மதுபோதையில் கூட்டாளியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை, மதுரவாயல், பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் சதிஷ்,  என்பவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று  அதிகாலை சுமார் 4 மணியளவில், வெளியில் சத்தம் கேட்டு எழுந்து வெளியில் வந்து  பார்த்தபோது, 2 நபர்கள் தெருவில் நிறுத்தி வைத்திருந்த 2 TATA ACE சரக்கு வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோவின் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் உடைத்து கொண்டிருந்தனார். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என  சதீஷ் கேட்டுள்ளார். உடனே அந்த நபர்கள் சதிஷின் பல்சர் இருசக்கர வாகனத்தையும் கட்டையால் தாக்கி உடைத்து விட்டு, சதிஷையும் தலையில் தாக்கிவிட்டுச் சென்றனர்.

    Also Read: அழகுநிலையத்தில் வேலைப் பார்க்கும் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - குன்றத்தூரில் பயங்கரம்

    அதை தடுக்க வந்த  64  வயதான ஷரி கிருஷ்ணண் என்ற முதியவரையும்  தாக்கினர் ,பின்னர்  காயமடைந்த சதிஷ் சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான  சம்பவ இடத்தில் விசாரணை செய்து மேற்படி ரகளையில் ஈடுபட்ட அதே தெருவில் வசிக்கும் நரேந்திரன், (வயது 29)  மற்றும் அவரது கூட்டாளி  மேஷாக், (வயது 19) ஆகிய இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    நரேந்திரன் மனைவிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆனால் மனைவி சில நாட்களுக்கு முன்பே சண்டை காரணமாக அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்த நேற்று முன்தினம்  இரவு நரேந்திரன் புது துணி,பரிசு பொருட்கள் ,கேக் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துள்ளார். நண்பர்களுக்கு பார்ட்டி அளிக்க மதுவையும் வாங்கி வைத்துள்ளார். ஆனால் மனைவி வராததால் இரவில் மதுவை குடித்த நரேந்தினரன் தூங்கிய நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் எழுந்து மறுபடியும் மது குடித்துள்ளார்.

    Also Read: கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்.. மாயமான பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

    போதை தலைக்கேறிய அவர் மனைவி மீது உள்ள கோவத்தால்  தனது உறவினருடன்  சேர்ந்து  மதுபோதையில் தகராறு செய்து அந்த தெருவில் நிறுத்தியிருந்த வாகனங்களை கட்டையால்  உடைத்தது விசாரனையில் தெரியவந்தது.  இதில் மேஷாக் என்பவர் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி போலீசார்  சிறையில்  அடைத்தனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Birthday, Celebration, Chennai, Crime News, Husband Wife, Police arrested

    அடுத்த செய்தி