• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரே நாளில் கணவன், மனைவி உயிரிழப்பு... இறப்பிலும் இணை பிரியாத தம்பதி...

ஒரே நாளில் கணவன், மனைவி உயிரிழப்பு... இறப்பிலும் இணை பிரியாத தம்பதி...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னை எர்ணாவூர் பகுதியில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    எண்ணூர் அடுத்த எர்ணாவூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் வயது 63. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 53 ) மற்றும் மகன்,  மகள் உள்ளனர். மனைவி ராஜலட்சுமி சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு பொருளாதார நிலை காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிள்ளைகள் அனைவரும் மருத்துவமனைக்கு தாயை சென்று பார்த்த நிலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது தந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

    மருத்துவர் பரிசோதித்ததில் தியாகராஜன் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. தந்தை இறந்ததால் தாய் செய்தி கேட்டு தாங்க மாட்டார் என்று தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த மனைவி ராஜலட்சுமி சில மணி நேரங்களிலேயே கணவர் இறந்த தகவல் தெரியாமலேயே உயிரிழந்தார்.

    மேலும் படிக்க... Thoothukudi | கப்பலுக்குள் இந்தியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் பின்னணியா?

    இறப்பிலும் இணைபிரியாமல் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் கணவரும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் எர்ணாவூர் சுற்று வட்டாரப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: