கொரோனா பரவல் காரணமாக காய்கறி கடைகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், நடமாடும் வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்களுக்கு காய்கறி கொள்முதல் செய்வதற்காக ஆங்காங்கே மொத்த சந்தைகள், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நடமாடும் காய்கறி வாகன வியாபாரிகள் இன்று அதிகாலை குவிந்தனர்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாட்டா ஏஸ், தள்ளுவண்டிகள் என கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதிகளவு வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேநேரம், காய்கறிகளின் விலையை குறைத்து கேட்பதாக தெரிவிக்கும் கோயம்பேடு வியாபாரிகள், இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மேலும் படிக்க... ஊரடங்கு விதிகளை பின்பற்றி கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டும்..
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Koyambedu