Home /News /tamil-nadu /

பெரியார் போல் மிமிக்ரி செய்த ஹெச்.ராஜா...

பெரியார் போல் மிமிக்ரி செய்த ஹெச்.ராஜா...

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

நாங்கள் இந்துத்துவா தான். இந்துத்துவா என்றால் தேசியவாதம். உலகத்திலேயே மதசார்பற்ற சித்தாந்தம் கொண்டது இந்து கலச்சார முறைதான் என்று ஹெச்.ராஜா பேசினார்.

    சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று பேசிய  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கிருஸ்துவ பள்ளிகள் மத மாற்றத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டினார்.

    அரியலூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மதமாற்றமே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது.  சிறுமி இறப்புக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, பொது செயலாளர் கருநாகராஜன், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், நடிகர் செந்தில், நடிகை காயத்ரி ரகுராம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

    நிகழ்வில் பேசிய ஹெச்.ராஜா, நாங்கள் இந்துத்துவா தான். இந்துத்துவா என்றால் தேசியவாதம். உலகத்திலேயே மதசார்பற்ற சித்தாந்தம் கொண்டது இந்து கலச்சார முறைதான். இவர்கள் எல்லாம் சட்டம் படிப்பது இல்லை. சேகர்பாபுவா ஸ்னேக் பாபுவா என்று தெரியவில்லை. காங்கிரஸ், திமுக, திமு, கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்துகளுக்கு விரோதமாக உள்ளன.  இந்துக்களுக்கு எதிராக சிலுவை போர் நடைபெற்று வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: அதிமுக குறித்து பாஜகவின் நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு


    மேலும்,  ‘நான் சிறுவயதில் ஈ.வே.ராவின் பொதுக்கூட்டத்தை கேட்டேன். அதில், எனக்கு முட்டா பசங்கதான் வேண்டும் என்று அவர் கூறுவார்.அதற்கு அனைவரும் கை தட்டுவார்கள். சில சமயம் நாயோடு பொதுக்கூட்டங்களுக்கு வரும் அவர், நாயும் நீங்களும் ஒன்று என்று கூறுவார். அதற்கும் எல்லோரும் கை தட்டுவார்கள்’ என்றும் பெரியார் போன்று பேசி காட்டினார்.

    தமிழகத்தில் மதமாற்ற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று  வலியுறுத்திய ஹெச்.ராஜா,  திமுக 2 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் தான் ஆட்சி அமைத்துள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மமதை கூடாது என்று தெரிவித்தார்.

    மேலும் படிங்க: இந்திய மொழிகளின் அறிவை தமிழக மாணவர்களுக்கு மறுப்பது சரியில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, H.raja, Tamilnadu

    அடுத்த செய்தி