முகப்பு /செய்தி /tamil-nadu / மாற்றுத்திறனாளிகளே இயக்கும் பேட்டரி சக்கர நாற்காலி ஸ்கூட்டர்: சென்னை ஐஐடியின் ‘நியோமோஷன்’ குறித்த தகவல்கள்!

மாற்றுத்திறனாளிகளே இயக்கும் பேட்டரி சக்கர நாற்காலி ஸ்கூட்டர்: சென்னை ஐஐடியின் ‘நியோமோஷன்’ குறித்த தகவல்கள்!

NeoMotion படி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கண்டுபிடிப்பானது NeoBolt என்று அழைக்கப்படுகிறது.

NeoMotion படி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கண்டுபிடிப்பானது NeoBolt என்று அழைக்கப்படுகிறது.

NeoMotion படி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கண்டுபிடிப்பானது NeoBolt என்று அழைக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தாண்டு ஜனவரியில், ஒடிசாவில் உள்ள பூரியைச் சேர்ந்த கமலா காந்த நாயக் என்ற 28 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் சக்கர நாற்காலியில் அதிக தூரம் பயணித்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்திருந்தார். சக்கர நாற்காலியில் 24 மணி நேரத்தில் 215 கிலோமீட்டர் தூரத்தை கடந்து உலக சாதனை படைத்திருந்தார். இதற்கு முன்பு, 2007ஆம் ஆண்டு டிசம்பரில், போர்ச்சுகலின் விலா ரியல் என்ற இடத்தில் உள்ள விலா ரியல் ஸ்டேடியத்தில், போர்ச்சுகலின் மரியோ ட்ரினிடாட் என்பவர் 24 மணி நேரத்தில் 182 கிலோமீட்டரை கடந்து சாதனை படைத்தார். அந்த சாதனையை இந்தியாவைச் சேர்ந்த கமலா காந்த நாயக் முறியடித்தார்.

மாற்றுத்திறனாளி இளைஞர் கமலா காந்த நாயக் தனது சக்கர நாற்காலியான 'நியோஃப்ளை'யைப் (NeoFly) பயன்படுத்தி சாதனை படைத்தார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது சென்னை ஐஐடி மற்றும் நியோமோஷனின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான TTK மையம் (R2D2) வடிவமைத்து உருவாக்கியதாகும். இதற்கிடையில், R2D2-ன் தலைவர் சுஜாதா சீனிவாசன் கூறுகையில், இந்த சக்கர நாற்காலியானது கமலா காந்த நாயக்கிற்கு ஏற்றவாறு, வசதி, பணிச்சூழலியல் மற்றும் பிற கூறுகளை வழங்குவதற்காக அவரது உடலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈர்ப்பு விசையின் மையத்திலிருந்து பொருத்தமான சக்கர அளவைத் தேர்ந்தெடுப்பது வரை, கமலா காந்த நாயக்கின் ஆற்றலை தனது நீண்டதூர கின்னஸ் உலக சாதனையின் போது திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அனைத்தும் செய்யப்பட்டது. மேலும், இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொள்வதற்கு முன்பு கமலா காந்த நாயக் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த NeoFly சக்கர நாற்காலியில் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் தங்குதடையின்றி செயல்பட உதவும் வகையில், சென்னை ஐஐடியின் ஸ்டார்ட்-அப்-ஆன நியோமோஷன் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த ஆண்டு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை உருவாக்கியது. NeoMotion படி, மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி கண்டுபிடிப்பானது NeoBolt என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது மாற்றுத்திறனாளிகள் தங்களைத் தாங்களே இயக்கி, பயணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணம் செய்ய, மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரத்தை (NeoBolt) கழற்றி, தேவைப்படும் நேரத்திலெல்லாம் சக்கர நாற்காலியில் (NeoFly) மீண்டும் இணைக்கலாம்.

இதையும் படிங்க | பனை மரங்கள் ஏன் அவசியம்? கடல் அரிப்பை தடுக்க பனை மரங்கள் எவ்வாறு பங்களிக்கின்றன?

ஆரம்பத்தில், ஒவ்வொரு நபரின் உடல் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு NeoFly-யை 18 வெவ்வேறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யலாம். NeoFlyக்குப் பிறகு, NeoMotion நிறுவனமானது சக்கர நாற்காலி பயனர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலி அனுபவத்தை வழங்க விரும்புவது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக இயங்கவும் விரும்பினர். எனவே, லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி (NeoBolt) சாதனத்தை கண்டுபிடித்தனர். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் 30 கி.மீ. வரை செல்ல முடியும் என்கின்றனர். இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி வாகனம் வரி உட்பட ரூ. 95,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாதங்களுக்குள் ஆர்டர் டெலிவரி செய்யப்படும். ஆகஸ்ட் 2021-இல், மஹிந்திரா தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனித்துவமான மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் இளைஞர் ஒருவர் செல்லும் வீடியோவைப் பகிர்ந்து, இந்த கண்டுபிடிப்பு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை விரைவுபடுத்த உதவும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: Siddharth

Independent Outdoor Mobility for Wheelchair Users - NeoBolt

Mobile: 97909 51730

info@neomotion.co.in.

First published:

Tags: IIT Madras, Physically challenged