சென்னையில் கனமழை: ஒருசில இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

கோப்புப் படம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் இருந்து லேசான மழை பொழிந்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

  • Share this:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து  வருகிறது. இதன் காரணமாக ஒருசில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், சில மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை முதலே லேசான மழை பெய்து வந்தது. கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இரவில் மழை மேலும் தீவிரமடைந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தி.நகர். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி போன்ற பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது.

இதேபோல், பூந்தமல்லி,குமணண்சாவடி,நசரத்பேட்டை,மாங்காடு, குன்றத்தூர்,போரூர்,ஐயப்பன்தாங்கள்,வளசரவாக்கம்,ராமபுரம், வானகரம், திருவேற்காடு, வேளப்பன்சாவடி, அயனம்பாக்கம், காட்டுப்பாக்கம், ராமபுரம், ஆலப்பாக்கம், ஆழ்வார் திருநகர் , மவுலிவாக்கம், முகலிவாக்கம் , மதுரவாயல், நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய மழை  பெய்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பத்தூர், ஆவடி, பாடி , முகப்பேர், அயப்பாக்கம்,  திருமுல்லைவாயில், திருநின்றவூர், நிமிலிச்சேரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இடி மின்னல் சூறை காற்றுடன் தற்போது கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக ஒருசில இடங்களில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: