வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக,
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பெரு
மழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையியில், இரவு முழுவதும் சென்னை தியாகராய நகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் பலத்த மழை பெய்தது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு மற்றும் கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இரண்டு நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைத்துக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை (இன்று) அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனடிப்படையில், சென்னையில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான இடங்களில் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற 600-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்ப்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்தால், அதனை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு, தேவையான காய்கறிகள் ஆகியவற்றை 2 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படியும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகே செல்பி எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெரு விளக்கு, மின் கம்பங்கள், மின்சார இணைப்புப் பெட்டிகளை தொடுவது, மரங்களின் கீழ் நிற்பது ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம்.
Must Read : ரெட் அலர்ட் : தமிழகத்தில் ஆங்காங்கே விடிய விடிய கொட்டிய மழை
மேலும், 044 - 25619204 என்பது உள்ளிட்ட தொலை பேசி எண்களும், 94454 77205 என்பது உள்ளிட்ட வாட்ஸ்அப் எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.