தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை: சாலைகளில் ஆறாக ஓடிய வெள்ள நீர்!

சாலைகளில் வெள்ளம்

சுமார் 45 நிமிடம் காற்றுடன் கூடிய கனமழையால் ஓஎம்ஆர் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன.திடீரென மழை பெய்ததால் இரவு நேரத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

  • Share this:
    தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்தது.

    சென்னையில், காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் இருள் சூழ்ந்த கருமேகங்கள் வலம் வந்த நிலையில் சில்லென்று காற்று வீசி வந்தது. வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம்,பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிகாலை முதலே வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை வருவது போன்று காட்சி அளித்து வந்த நிலையில் திடீரென பயங்கர காற்று வீச தொடங்கி சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் செல்ல முடியாமல் ஆங்காங்கே தஞ்சமடைந்தனர்

    இதையும் படிங்க: கூட்டுறவு சங்கத்தில் மோசடி: தப்பிப்பதற்காக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய நபர்!


    சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையின் காரணமாக சாலையில் உள்ள தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ள நீராய் காட்சியளித்தது.

    சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பள்ளிகாரணை, மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம், நாவலூர், தாழம்பூர், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 45 நிமிடம் காற்றுடன் கூடிய கனமழையால் ஓஎம்ஆர் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன.திடீரென மழை பெய்ததால் இரவு நேரத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    மேலும் படிக்க: தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவுக்கும் டெங்குவுக்கும் ஒரே மாதிரி அறிகுறிகள்..




    இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.. பலத்த காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கப்பலூர், கள்ளிக்குடி ,கல்லு பட்டி  உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இந்த மழையால் மானாவாரி பயிர்கள் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.



    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பகலில் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை மழை பெய்தது. 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை காரணமாக வெப்பம் தணிந்து காணப்பட்டது.



    திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக கொட்டித்தீர்த்தது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மழை நீடித்த நிலையில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது,மணப்பாறை பேருந்து நிலையம் பின்புறம் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்
    Published by:Murugesh M
    First published: