• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மழை: 2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுதான் அதிகம்- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மழை: 2015ம் ஆண்டுக்கு பின்னர் இதுதான் அதிகம்- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மழை

சென்னை மழை

கடந்த 2015 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 294 மி.மீ. மழை பெய்ததாக சமீபத்திய அதிகமாகும். தற்போது மீண்டும் 200 மி.மீ. அளவை கடந்து மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பதிவு செய்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சந்தித்துள்ள பெருமழை இது என்று தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் கூறியுள்ளார்.

    அக்டோபர் 26ம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழைபெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. பூழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அவற்றில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளன.

    சென்னையில் தொடர்ச்சியாக பெய்துவரும் இந்த கனமழை கடந்த 2015ம் ஆண்டு பெய்த மழையை சென்னை மக்களுக்கு நினைவுப்படுத்தியுள்ளது. இதனிடையே கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது முகநூல் பக்கத்தில், 2015ம் ஆண்டுக்கு பின்னர் சென்னையில் பெய்துவரும் கனமழை இது என்றும் குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னையில் அதிக மழைபெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேகங்கள் அந்த பகுதியை நேக்கி நகர்ந்து வருவதாக பதிவிட்டுள்ள அவர், இன்று காலை 7.30 நிலவரப்படி நுங்கம்பாக்கத்ஹ்டில் 207 மி.மீ. மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் 294 மி.மீ. மழை பெய்ததாக சமீபத்திய அதிகமாகும். 2016 , 208, 2019  ஆகிய ஆண்டுகளில்  150 க்கு மேற்பட்ட மி.மீ. மழையும் 2017 ஆம் ஆண்டு 183 மி.மீ. மழையும் 2020 ஆம் ஆண்டு 162 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.



    மயிலாப்பூரில் 205 மி.மீ., அம்பத்தூரில் 205 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நீலகிரி முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துவந்தாலும் சென்னையில் பெய்துவரும் மழை மிக அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.  இன்று இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. டிசம்பர் மாதத்தில் தொடச்சியாக 3 நாட்களுக்கு பெய்த கனமழை  மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காரணமாக சென்னையின் அடையாறு ஆற்றின் கரையோரபகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

    மேலும் படிக்க: வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி..மதியம் 1.30 மணிக்கு உபரி நீர் வெளியேற்றம் - கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: