முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் 2-வது நாளாக கொட்டும் கனமழை!

சென்னையில் 2-வது நாளாக கொட்டும் கனமழை!

மழை

மழை

Chennai Rains | Weather Update | சென்னையில் நேற்று தொடர் கனமழை பெய்த நிலையில், இன்றும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் சாலை எங்கும் வெள்ளநீர் ஓடியது. சுரங்கப் பாதைகளும், சாலைகளும் மழைநீர் சூழ்ந்ததால் அவைகள் மூடப்பட்டன. சாலைகளில் ஓடிய மழை நீரால் போக்குவரத்து முடங்கியது. கனமழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே சென்னையில் இன்றும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேடவாக்கம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, பள்ளிக்கரணை, கொளத்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கிண்டி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமடைந்துள்ளனர்.

Also Read : மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி ஊற்றிய இலங்கை கடற்படை - நீதிமன்றம் கண்டனம்

சென்னையில் பெய்த கனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல என்று வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் கடலில் இருக்கும் என்று கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்குசுழற்சி நிலப்பரப்பை நோக்கி நகர்ந்ததே சென்னையில் இந்த அளவிற்கு திடீர் கனமழைக்கு காரணம். கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வேகமாக நகர்ந்ததால் நேற்றே கனமழை பெய்தது. கடலில் இருக்கும் கணிக்கப்பட்ட வளிமண்டல சுழற்சி திடீரென நிலப்பகுதிக்கு நகர்ந்தது என்றார்.

First published:

Tags: Weather News in Tamil