பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்தித்தார், அப்போது பேசிய அவர், ஐஐடி வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 19,20,21 ஆகிய தேதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 700 பேலுக்கு நேற்று வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இதனால் இதுவரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அங்கேயே தனிமைபடுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். ஐஐடி விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது, மேலும் ஐஐடியில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தனிமைபடுத்த வேண்டும், வெப்பமாணி மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அக்கறையுடன் மக்கள் முக கவசம் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும், வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் சுய மருத்துவ கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் நோய்த்தொற்று இருப்பவர்கள் அதிகமாக மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவமனை உழியர்களுக்க்கு உரிய கட்டுப்பாடுடன் செயல்பட அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 1.8 லட்சம் படுக்கைகள் கொரோனா உச்சத்தில் இருந்த போது தயாராக இருந்தது. தற்போது 1.1 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இதில் 18 பேர் மட்டுமே படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐ சி யு வில் இரண்டு பேர், ஆக்சிஜன் வசதியுடன் ஏழு பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுவரை அறிகுறி இல்லாமல் 256 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர் என கூறினார்.
தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை தினசரி 4,000 என்று குறைந்த நிலையில், நேற்று மட்டும் 1.20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Also read... நரிக்குறவ பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் காப்பீடு அட்டை - மதுரை ஆட்சியரின் முன்னுதாரண செயல்!
ஐஐடியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்திட அறிவுறுத்துதல் செய்யபடும் மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Corona, CoronaVirus, Covid-19, Radhakrishnan, Tamil News