சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட திருட்டு. வழிப்பறி, செல்போன் பறிப்பு, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்து. செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த தனிப்படை அமைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் நடந்த திருட்டு, கொள்ளை, செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன மொத்த வழக்குகளில் சென்னை வடக்கு மண்டலத்தில் 272.78 கிராம் தங்க நகைகள், 262 செல்போன்கள், 7 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களும், சென்னை மேற்கு மண்டலத்தில் 712.44 கிராம் தங்க நகைகள், 297 செல்போன்கள், 46 இருசக்கர வாகனங்கள், 9 ஆட்டோக்கள், மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படன.
அதே போல தெற்கு மண்டலத்தில் 1,115 கிராம் தங்க நகைகள், 654 செல்போன்கள், 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 12 நான்கு சக்கர வாகனங்களும் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 320 கிராம் தங்க நகைகள், 250 செல்போன்கள் 85 இருசக்கர வாகனங்கள். 3 ஆட்டோக்கள், 16 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமுள்ள 4 மண்டலங்களிலிருந்தும் சுமார் ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள 2419.72 கிராம் தங்க நகைகள், 1,463 செல்போன்கள், 183 இருசக்கர வாகனங்கள், 12 ஆட்டோக்கள், மற்றும் 46 நான்கு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் பெரும்பாலான, தங்கநகைகள், இருசக்கரவாகனங்கள். செல்போன்கள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கைப்பற்றப்பட்டு கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : ஆதிபராசக்தியின் அவதாரம் என நான் கூறவில்லை, எனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர் - அன்னபூரணி
அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மீட்கப்பட்ட பொருட்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும், சென்னையில் நடைபெறும் கொள்ளை, கூட்டுக்கொள்ளை. வழிப்பறி மற்றும் கொடுங்குற்றச்செயல்களில் ஈடுபடும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், திருட்டு குற்றச்செயல்கள் தடுக்கவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு "Drive Against Crime Offender8" (DACO) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளில் மொத்தம் 2,283 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டதாகவும், இதில் சந்தேக நபர்கள் 1,689 பேரும், ஊரறிந்த குற்றவாளிகள் 491 நபர்களும், கைச்சுவடி குற்றவாளிகள் (Dossier Criminal) 17 நபர்களும், Modus Operand (MOB) குற்றவாளிகள் 37 நபர்களும் அடங்குவர் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், திருட்டு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, வழிப்பறி மற்றும் கொடுங் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.