முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் - சென்னைவாசிகளை எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை ஆணையம்

சென்னையில் 40 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும் - சென்னைவாசிகளை எச்சரிக்கும் பேரிடர் மேலாண்மை ஆணையம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

  • Last Updated :

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த யாஸ் புயலானது தற்போது அதிதீவிரமாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலால் மணிக்கு 165 கி.மீ. முதல் 185 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும். மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.வடதமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு சூரைக்காற்று மணிக்கு 30 - 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் காற்று மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Chennai, Rain, Storm, Tamilnadu