Tamil Nadu Full Lockdown: மளிகை, காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கும்!

மளிகை கடை

அந்த நேரத்தில் மட்டும் வெளியில் சென்று மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்.

  • Share this:
    தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொற்று படு வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட 25,000 தொற்றுகள் பதிவாகின்றன. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் வரும் மே 10-ம் தேதி காலை 4 மணி முதல், மே 24-ம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக இன்றும், நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதி ஊரடங்கு அமலுக்கு வந்ததும் அடுத்த 2 வாரங்களுக்கு அதாவது மே 24-ம் தேதி வரை, காலை முதல் நண்பகல் 12 மணி வரை மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மட்டும் வெளியில் சென்று மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ளலாம்.

    கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை  கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: