சென்னையில் ஆக்கரமிரப்புகளை அகற்ற முயன்றபோது கண்ணையா என்ற நபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்
பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீண்டகாலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது என்றும் இவ்வாறு செய்வது மனித உரிமை மீறல் என்றும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த பணியின்போது, 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை இடிப்பதை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க - சென்னையில் வயதான தம்பதி அடித்துக்கொலை.. பண்ணை வீட்டில் புதைக்கப்பட்ட சடலம்.. ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்!
கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் அங்கிருந்த அரசு வாகனங்கள், புல்டோசரின் மீது கற்களை எரிந்து அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க - Exclusive | பாஜகவில் இணைய உள்ளேன்.. திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் பரபரப்பு பேட்டி
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்களை அகற்றக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது-
சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல்; அதை அனுமதிக்க முடியாது!
கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.