Home /News /tamil-nadu /

ஒருங்கிணைந்த வளர்ச்சியே இந்தியாவிற்கு தற்போதைய தேவை - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒருங்கிணைந்த வளர்ச்சியே இந்தியாவிற்கு தற்போதைய தேவை - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியாவிற்கு உள்ள எதிர்கால கனவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவது காலத்தின் கட்டாயம் என்று ரவி தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
அனைத்து மாநிலங்களும்.ஒருங்கிணைந்து வளர்சி பெறுவதே இந்தியாவிற்கு தற்போதைய தேவை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், உலகின் வளர்ந்த நாடுகள் பல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அவற்றை குறைப்பதற்கு எவ்வித முன்னெடுப்புகளும் எடுக்காத நிலையில் இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத நாடாக மாறுவதற்கு உறுதிபூண்டு உள்ளதாக தெரிவித்தார். இது  மிக தைரியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு உள்ள எதிர்கால கனவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவது காலத்தின் கட்டாயம் என்றும் ரவி தெரிவித்தார்.

Also read... கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 26 பதக்கங்களை அள்ளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்

மேலும், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும் மாநிலங்களுக்கிடையே சில துறை வளர்ச்சியில் சமமற்ற போக்கு காணப்படுவதாக குறிப்பிட்டார். அவ்வாறு இல்லாமல் மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைந்த வளர்ச்சியே இன்று இந்தியாவின் தேவை என்றும் ஆளுநர் ரவு கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: RN Ravi

அடுத்த செய்தி