• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்.. ஒரே நாளில் வெவ்வேறு விமானங்களில் வந்த 3 பயணிகள் சிக்கினர்!

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்.. ஒரே நாளில் வெவ்வேறு விமானங்களில் வந்த 3 பயணிகள் சிக்கினர்!

சென்னைக்கு குவைத், சார்ஜா, இலங்கையில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

  • Share this:
    சென்னைக்கு குவைத், சார்ஜா, இலங்கையில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புடைய 1.1 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, 2 பெண்கள் உட்பட 3 பயணிகளை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை.

    சென்னை சா்வதேச  விமான நிலையத்திற்கு குவைத்தில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று அதிகாலை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையினா் கண்காணித்தனர்.

    அப்போது தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி, வெளியே செல்ல முயன்ற சென்னையை சோ்ந்த 32, வயது பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி, பெண் சுங்கத்துறையினா் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். அப்போது அவா் தன்னிடம் கவரிங் நகைகள் இருப்பதாக எடுத்து காட்டினாா்.

    இதனால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் சோதனை செய்ததில் அவைகள் தங்க நகைகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, ரூ.19.5 லட்சம்  மதிப்புடைய 470  கிராம் தங்க நகைகளை கைப்பற்றினார்கள். அதோடு பெண் பயணியையும் கைது செய்தனா்.

    இதைத்தொடர்ந்து, சார்ஜாவில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனை செய்தபோது, கடலூரை சோ்ந்த 35 வயது பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண் பயணியின் உடமைகளை சோதனை செய்ததில், பெண்கள் தலைக்கு அணியும் ஹேர் பேண்ட், ஸ்லைடு போன்றவைகள் தங்கத்தில் செய்து நிக்கல் முலாம் பூசியிருந்ததை கண்டுப்பிடித்தனா். இதைத்தொடர்ந்து, அவரிடமிருந்து ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள 367 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சோதனையிட்டபோது சென்னையை சோ்ந்த 28 வயது ஆண் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க மாத்திரைகள் போன்ற தங்க  உருண்டைகளை கைப்பற்றினா். அவரிடம் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்புடைய 263 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்.

    சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் அடுத்தடுத்து 3 விமானங்களில் வந்த 2 பெண் பயணிகள் உட்பட 3 பேரிடமிருந்து, ரூ.48  லட்சம் மதிப்புடைய 1.1  கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: