வாளி, துப்புரவு பொருட்களை கொண்டு நீதிமன்றத்தை சுத்தப்படுத்த போகிறேன்: தலைமை நீதிபதி அறிவிப்பு!

சஞ்ஜிப் பானர்ஜி

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலை இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Share this:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை  தூய்மைப்படுத்தும் பணியில் தான் ஈடுபட உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர்  தனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனுதாரர் தரப்பில்,  மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஊடகவியலாளர், ஊடக நிறுவனங்களின் பதிவுகளை அகற்ற அரசுகளிடம் இருந்து கோரிக்கை அதிகரிப்பு: ட்விட்டர் தகவல்!


மேலும் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 19 துப்புரவு பணியாளர் வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: 'பெட்ரோலும் வேண்டாம், கரண்டும் வேண்டாம்' - மதுரை இளைஞர் உருவாக்கிய சோலார் சைக்கிள்!


இதனை ஏற்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் தூய்மை படுத்தபடாமல் இருப்பதை கவனித்ததாகவும், எனவே  ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று தானே நேரடியாக ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நீதிமன்றத்தை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பணிக்கு தன்னுடன் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்களும் சேர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்  என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.
Published by:Murugesh M
First published: