Home /News /tamil-nadu /

சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்..11 பெண்கள் கைது - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்..11 பெண்கள் கைது - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்ட நாட்களாக இதுபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

    சென்னை சேத்துப்பட்டில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளார்.

    சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருசங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் சென்னை மாநகர போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை சேத்துப்பட்டு, எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக G-7 சேத்துப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியை கண்காணித்து வந்தனர். குறிப்பிட்ட வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    Also Read: Gun-ம் என்னதுதான் பொண்ணு என்னதுதான் – மணமேடையில் மாஸ் காட்டிய மாப்பிள்ளை

    அங்கு 11 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.  சட்டவிரோதமாக சீட்டுகட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட துரைராஜ் மற்றும் 11 பெண்கள் உட்பட 12 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ரூ.18,680 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, நீண்ட நாட்களாக இதுபோல் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai Police, Crime | குற்றச் செய்திகள், Police, Woman

    அடுத்த செய்தி