சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியலை வெளியிட்டுப் பேசிய, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இப்பட்டியலை வெளியிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் பாலகங்கா, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அரசியல் கட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தனர்.
வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு குறித்தும் வார்டுகள் எண்ணிக்கை தொடர்பாகவும் அரசியல் கட்சியினர் தங்கள் கருத்தை தெரிவித்தனர். அதை கேட்டுக்கொண்ட ககன் தீப்சிங் பேடி , தலைமை தேர்தல் அதிகாரி பழனிகுமாருடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாவட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் - 2021-ன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள்- 40,54,038 என்றும் அதில் ஆண்கள்- 19,92,198 பேரும், பெண்கள்- 20,60,767, மூன்றாம் பாலினத்தவர்கள்- 1073 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதி- துறைமுகம்( 1,76,679) என்றும், அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி வேளச்சேரி (3,15,502) என்றும் தெரிய வந்துள்ளது.
19.3.2021 அன்று வெளியிடப்பட்ட வாக்களர் பட்டியலில் மொத்த வாக்களர் எண்ணிக்கை 40,57,061 இருந்த நிலையில் தற்போது 40,54,038 வாக்காளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் 22,492 வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 25,515 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
1-1-2022 தேதிக்குள் 18 வயது பூர்த்தியடைபவர்கள், வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு தொடர்பாக இந்த மாதம் இறுதி வரை மாநகராட்சி மண்டல அலுவலகம் அல்லது இணையத்தில் (www.nvsp.in) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,750 வாக்கு சாவடிகள் சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து - உயர்நீதிமன்ற மதுரை கிளை
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் ககன் தீப்சிங் பேடி, 3,750 வாக்கு சாவடிகள் சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் என்றார். சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக மாநகராட்சி தயாராக இருப்பதாகவும் அப்போது கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Local Body Election 2021, Voters list