மீன்கடைகள், காய்கறி கடைகளில் குவிந்த பொதுமக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்!

மளிகை, காய்கறி வாங்க அலைமோதிய கூட்டம்

காசிமேடு, திருவொற்றியூர் காலடிபேட்டை மற்றும் தேரடி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

 • Share this:
  நாளை முழு நேர ஊரடங்கு எதிரொலி மீன்கடைகள், காய்கறி கடைகளில் பொதுமக்கள் குவிந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நோய்த்தொற்றின் தீவிரத்தால் திங்கட்கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் அதிகாலை முதலே அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்கப்படாமல் போய்விடுமோ உணவுக்கு என்ன செய்வது என்று அறிந்த மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் காய்கறி மீன்கள் மற்ற மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்குவதற்காக காசிமேடு, திருவொற்றியூர் காலடிபேட்டை மற்றும் தேரடி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

  காசிமேடு


  வியாபாரிகளும் காவல்துறையின் சார்பில் சமூக இடைவெளியை கடைபிடிக்க கூறி பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் தங்கள் பொருட்களை வாங்கிச் செல்வதில் மட்டும் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர். நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், இது போன்ற பொது மக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதால் நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகமோ அல்லது தமிழக அரசு இதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

  செய்தியாளர்: அசோக் குமார்
  Published by:Esakki Raja
  First published: