சென்னை வாசிகளுக்கு இலவச Wifi - மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு

மாதிரி படம்

சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.

 • Share this:
  ewsபெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பின் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்கள் 30 நிமிடங்கள் இலவச வைபை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஒருங்கிணைந்த மற்றும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைந்து நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதே ஆகும்.

  மாநகரின் முக்கிய இடங்களை கண்காணித்தல் பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசரகாலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

  Also Read : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

  இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள WIFI தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச Wifi பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

  Also Read : பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு

  மேலும் பொதுமக்கள் Wifi இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: