சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில் உள்ள (Assyst Career Generating Pvt Ltd) என்ற நிறுவனத்தை நேரில் சென்று அணுகியுள்ளார். அங்கு கிளீனா கிரியேட்டர் (29), மற்றும் அவரது அம்மா அனிதா கிரியேட்டர்(59), நல்ல விதமாக பேசி 25,00,000 லட்ச ரூபாய் பணத்தை பெற்று போர்ச்சுக்கல் நாட்டிற்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுக்கடித்து வந்தனர். வேலை வேண்டும் என நெருக்கடி கொடுத்தபோது கொஞ்சம் கொஞ்சமாக ரூபாய் 11 லட்சம் வரை திரும்ப தந்து விட்டனர். ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு அலுவலகத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக 22-12-2021 அன்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சி.எஸ்.ஆர். மட்டுமே பதிவு செய்து கிடப்பில் போட்டுள்ளனர் போலீசார். பின்னர் தன்ஷிகா அடையார் துணை ஆணையர் மகேந்திரன் அவர்களை கடந்த மாதம் அணுகினார். அவர் வழக்குப்பதிவு செய்ய உத்தவிட்டு, லுக் அவுட் நோட்டிசும் வழங்கினார்.
இன்று கிளீனா மற்றும் அவரது தாய் அனிதா இருவரும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். கிளீனா அமெரிக்கா செல்லவிருந்ததாகவும், அவரது தாய் வழியனுப்ப சென்றிருந்தார். அப்போது லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருந்ததால் அவர்களை பிடித்து வேளச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Must Read : கேள்வி கேட்க எழுந்த செல்லூர் ராஜு... சபாநாயகரிடம் முறையிட்ட துரைமுருகன்.. பேரவையில் சிரிப்பலை
இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்ததில் இவர்கள் இதுபோல் பலபேரை ஏமாற்றி கோடிக் கணக்கில் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்ததாக போலீசார் கூறினர். பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
செய்தியாளர் - ப.வினோத்கண்ணன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.