முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மயக்க மருந்து... ஆக்சிஜன் மாஸ்க்... உயிருக்கு போராடிய நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து மீட்ட வனத்துறையினர்!

மயக்க மருந்து... ஆக்சிஜன் மாஸ்க்... உயிருக்கு போராடிய நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து மீட்ட வனத்துறையினர்!

பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்

நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து, வனத்துறை மருத்துவர்கள் காப்பாற்றிய செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

  • Last Updated :

வயிறு கிழிந்து குடல் வெளியே வந்த நல்ல பாம்பு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேளையில், அதனை மீட்டு மயக்க மருந்து கொடுத்து ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்து அறுவை சிகிச்சை செய்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளனர் கிண்டி வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள்.

கனமழை காரணமாக ஏறட்டுள்ள வெள்ளத்தில் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வரும் பாம்புகளை கிண்டி வனத்துறையினர், தகவலின் பேரில் சம்பவ இடம் சென்று அந்த பாம்புகளை மீட்டு அதனை பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை பாடி லூகாஸ் பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நேற்று முன் தினம் நடந்தது. அங்கு புதரில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று JCB இயந்திரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

வயிறு கிழந்தது உடல் பாதியாக துண்டாகும் நிலையில் அந்த பாம்பு இருந்தது.

இது குறித்து பொதுமக்கள் கிண்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடல் முழுவதுமாக கிழிந்து குடல் வெளியே வந்த நிலையில் இருந்த அந்த நல்ல பாம்பை, வனத்துறை ஊழியர்கள் கிண்டியிலுள்ள வனத்துறை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

அங்கு அறுவை சிகிச்சை செய்து குடலை உள்ளே வைத்து சிகிச்சை செய்தால் மட்டுமே பாம்பு பிழைக்கும் என மருத்துவர்கள்  கூறியுள்ளனர். பின்னர் நல்லபாம்புக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த  அறுவை சிகிச்சையில் வயிற்று பகுதியிலிருந்து வெளியே வந்த குடல் முழுவதையும் மீண்டும் வயிற்றுனுள் வைத்து பின்னர் தையல்கள் போட்டு நல்லப்பாம்பை வெற்றிகரமாக வனத்துறை மருத்துவர்கள் மீட்ட்டுள்ளனர்.

தற்போது கண்ணாடி குடுவையில் வைத்து அதன் உடல் நிலை முழுவதும் கண்கானிக்கப்பட்டு வருகிறது என்றும், பாம்பு  முழுமையாக குணமானதும் வனத்தில் விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Must Read : ஒமைக்ரான் வைரஸ் : 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடு

top videos

    பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்து வனத்துறை மருத்துவர்கள் காப்பாற்றிய செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai Rain, Forest Department, Guindy, Snake