Home /News /tamil-nadu /

வழக்கறிஞர் வீட்டு Gate-ஐ தூக்கிய திருடன்.. அலட்சியம் காட்டும் போலீஸ்- வைரலான சிசிடிவி காட்சிகள்

வழக்கறிஞர் வீட்டு Gate-ஐ தூக்கிய திருடன்.. அலட்சியம் காட்டும் போலீஸ்- வைரலான சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Chennai | ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போதே தைரியமாக வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடும் CCTV காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    சென்னை வேளச்சேரியில் குப்பை பொருட்களை எடுக்க வருபவர்கள் போல் வந்த இருவரில் ஒருவர் வழக்கறிஞர் வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. புகார் அளித்தால் புகாரை ஏற்க போலீசார் மறுப்பதாக குற்றச்சாட்டு.  

    சென்னை வேளச்சேரி நியூசெக்ரடேயட் காலனி 6வது தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் செல்வராஜன் என்பவர் இன்று தனது வீட்டில் வைத்திருந்த இரும்பு கேட்டை கானவில்லை என பார்த்துள்ளார். அவருடைய வீட்டில் பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தபோது சாலையில் வீசப்படும் அட்டை போன்ற பழைய பொருட்களை எடுப்பவர்கள் போல ஒருவர் ட்ரை சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்துள்ளார். மற்றொருவர் கையில் கோனி பையுடன் நடந்து வந்து வீட்டின் முன்பு வெளியே யாரும் இல்லாததை பார்த்ததும் உள்ளே புகுந்து இரும்பு கேட்டை திருடி சென்றுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

    Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்

    திருட வந்த அந்த நபர் சிகிரெட் பிடித்தபடி வீட்டின் முன்பு நின்று சாவகாசமாக சிகிரெட் பிடித்துவிட்டு அங்கு பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளதையும் பார்த்துவிட்டு பின்னர் தைரியமாக உள்ளே சென்று இரும்பு கேட்டை திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரான வழக்கறிஞர் செல்வராஜன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அலட்சியமாக பேசி புகாரை ஏற்க மறுத்ததாக கூறினார்.

    Also Read: நிலப்பிரச்னையில் மகளை குத்திக்கொன்ற சித்தப்பா.. திருவள்ளூரை அதிர வைத்த சம்பவம்

    சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போதே தைரியமாக வீட்டில் புகுந்து இரும்பு கேட்டை திருடும் சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிசிடிவி காட்சியுடன் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் எழுப்புகின்றனர்.

    செய்தியாளர்: வினோத்கண்ணன் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV, CCTV Footage, Crime | குற்றச் செய்திகள், Lawyers, Theft

    அடுத்த செய்தி