இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்... தடையை மீறும் மீனவர்களுக்கு அபராதம்
இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்... தடையை மீறும் மீனவர்களுக்கு அபராதம்
தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்
Fishing Ban | தடைக்காலத்தில் நாட்டுப் படகுகளைத் தவிர விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவ்வாறு தடையை மீறி மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இதில் 69 லட்சம் மீனவ குடும்பங்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டு தோறும் மீன் இன பெருக்கத்திற்காக ஏப்ரல் மாதம் 15 தேதி முதல் மே மாதம் 29 தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் விசைபடகில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 45 நாட்களை உயர்த்தி 61 நாட்கள் தடைக்காலம் நீடிக்கப்பட்டது.
இந்த தடைக்காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருவதால் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலும் புதுச்சேரி,காரைக்கால் உள்ளிட்ட 15 கடலோர மாவட்ட 69 லட்சம் மீனவ குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கபடுகின்றனர். தடைகாலத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
ஏப்ரல் மாதம்15 முதல் ஜூன் மாதம்14 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதால் கடலுக்கு சென்ற அனைத்து படகுகளையும் கரைக்கு வந்து விட்டதா என மீன்பிடி உதவி இயக்குனர் ஆய்வு செய்வார்கள். தடைக்காலத்தில் கட்டுமரம் பைபர் படகு மற்றும் நாட்டுப் படைகளை தவிர விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை.இந்த தடை க்காலத்தில் மீனவர்கள் வலைகளையும் படகுகளையும் பழுது பார்க்கும் வேலையில் ஈடுபடுவார்கள்.
மேலும் தடைக்காலத்தில் நாட்டுப் படைகளை தவிர விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பதில்லை. அவ்வாறு தடையை மீறி மீன் பிடிக்க செல்லும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
விசைப்படகுகள் பெரும்பாலும் டீசல் அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம். தற்போது இருக்கின்ற சூழ்நிலை டீசல் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாங்கள் பிடித்து வருகின்ற மீன்கள் நல்ல விலைக்கு விற்றாலும் பெரும்பாலும் கிடைக்கின்ற லாபம் அனைத்தும் டீசலுக்கு செலவாகின்றது. கடந்த முறை டீசல் விலை உயர்வு காரணமாக குறைந்த சதவீத விசைப்படகுகள் மட்டுமே கடலில் மீன்பிடிக்கச் சென்றது.
ஆனால் தற்போது டீசல் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது இதே நிலைமை நீடித்தால் எண்ணிக்கைகள் குறைவான விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும். எனவே தமிழக அரசு மற்றும் மீன்வளத்துறை மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கு கொடுக்கக்கூடிய டீசலை வரிவிலக்கு அளிக்க வேண்டும் அதேபோல் ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.