• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மூதாட்டியையும், நாயையும் மீட்க வெள்ளத்தில் சென்ற தீயணைப்பு துறை.. வாகனத்தில் ஜம்மென்று அமர்ந்து வந்த நாய்...

மூதாட்டியையும், நாயையும் மீட்க வெள்ளத்தில் சென்ற தீயணைப்பு துறை.. வாகனத்தில் ஜம்மென்று அமர்ந்து வந்த நாய்...

மீட்கப்பட்ட நாய்

மீட்கப்பட்ட நாய்

சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூதாட்டியையும், நாயையும் தீயணைப்புத்துறையினர் வந்த மீட்டனர்.

  • Share this:
சென்னையில் பெய்துகொண்டிருக்கும் கன மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் ஒரு மூதாட்டியையும் அவரது நாயையும் தீயணைப்பு வண்டியுடன் வெள்ளத்தில் சென்று மீட்டு வந்த செய்தியறிந்த தீயணைப்புத் துறை உயர் அதிகாரிகள் தீயணைப்பு வீரர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி ஏ.ஜி.எஸ் காலனியில் கடந்த திங்கள்கிழமையன்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த நிலையில் அப்பகுதியில் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தனிமையில் வசித்த அந்த மூதாட்டியும் அவரது ட்யூக் என்ற லேப் வகை நாயும் உதவிகள் ஏதும் கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர்.

எதிர் வீட்டில் உள்ளவர்களிடம் உதவி கேட்க அவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வேளச்சேரி முழுவதும் தண்ணீரில் மூழ்கியிருக்க சிறிதும் தாமதிக்காது தீயணைப்பு துறையினர், தீயணைப்பு வாகனத்தின் மூலம் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வெள்ள நீரிலேயே பயணித்து அந்த வீட்டை அடைந்துள்ளனர்.

மீட்கப்படும் நாய்


பின்னர் மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினரை பார்த்து டியூக் என்ற அந்த நாய் தன்னையும் மீட்கும்படியாக தீயணைப்புத் துறையினரை பார்த்து குறைத்துள்ளது. பின்னர் ட்யூக் என்ற நாயை மீட்ட தீயணைப்பு துறையினர் வாகனத்தின் பின் பகுதியில் இருந்த இடத்தில் நாயே வைத்து மீட்டுள்ளனர்.

நாயும், தானும் தன் முதலாளியும் மீட்கப்பட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஜம்மென்று தீயணைப்பு வாகனத்தில் அமர்ந்தபடியே பயணித்தது. இந்த சம்பவம் அங்கிருந்த நபர்களை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

தனி ஒரு மூதாட்டி மற்றும் அவரது நாயை மீட்கும் பணியில் தீயணைப்பு வண்டியை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் வெள்ள நீரில் எடுத்துக்கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் சேர்த்த பஞ்சவர்ணம், சக்தி மோகன், கணேஷ், ஷாஜன், தமிழன்பன் ஆகிய தீயணைப்புத் துறையினரை தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மீட்பு பணி என்று வந்த பிறகு மனிதன் என்ன? மிருகம் என்ன? அனைத்தும் உயிர் தான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எல்லா உயிர்களையும் காப்பாற்றுவது எங்களது கடமை என்கின்றனர் அத்தீயணைப்புத் துறையினர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: