Home /News /tamil-nadu /

தார்பாலின் சீட்டுகளை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

தார்பாலின் சீட்டுகளை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து - ரூ. 1.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!

தீ விபத்து

தீ விபத்து

இன்று அதிகாலை திடீரென நிகழ்ந்த தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார்.

  • News18
  • Last Updated :
    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தார்பாலின் சீட்டுகளை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

    கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை கிராம சாலையில் STP LIMITED (WATER PROOFING INDIA என்ற தார்பாலின் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக சிறியதாக பற்றிய தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதில் தொழிற்சாலையில் ஏற்கனவே தயார் செய்யப்பட்டு ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாய்கள் எரிந்து சாம்பலாகின.

    பூமிக்கு அடியில் புதைக்கப்படும் ராட்சத தண்ணீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் உள்ளிட்டவைகளில் மேல் பூச்சுகளாகவும் இந்த தார்பாலின் சீட்டுகள் பயன்படுத்தபடும். மேலும் தொழிற்சாலைகளில் உள்ள இரும்பு சீட்டுகளில் உள்வெப்பத்தை தவிர்க்க மேலே போடுவதற்கு அதிகமாக பயன்படுத்தபடும் சீட்டுகளை இந்த தொழிற்சாலை கடந்த 20 வருடங்களாக செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென நிகழ்ந்த தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அம்பத்தூர், வில்லிவாக்கம், ஜெ.ஜெ நகர், கோயம்பேடு திருவல்லிக்கேணி வண்ணாரப்பேட்டை, உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 8க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. 25 மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

    Also read... பல்வேறு குற்றப் பின்னணியுடைய சொமொட்டோ டெலிவரி பாய் வெட்டிப்படுகொலை - போலீசார் தீவிர விசாரணை!

    இந்த தொழிற்சாலையில் ஊழியர்கள் யாரும் இரவு பணிக்கு வராததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் என்ன என்று அம்பத்தூர் தொழிற் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    -செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Fire accident

    அடுத்த செய்தி