போக்குவரத்து போலீசாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளரால் பரபரப்பு.
சென்னை அண்ணாசாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்றிரவு ஸ்பென்சர் சிக்னல் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தி.நகரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு அண்ணா சாலை ஸ்பென்சர் வழியாக TN10AV 5050 என்ற பதிவெண் கொண்ட பென்ஸ் சொகுசு கார் அதிவேகத்தில் வந்துள்ளது. காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்ட போது காரில் இருந்த மூன்று நபர்கள் அளவுக்கு அதிகமாக மதுகுடித்திருந்தது தெரியவந்தது.
Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்
குடிபோதையில் சொகுசு வாகனத்தை ஓட்டி வந்த நபர் மீது போலீசார் DD வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் காக்கி உடையை கழட்டி விடுவதாகவும் மேலும் தான் யார் என தெரியாமல் தன்னிடம் மோதுவதாகவும் கூறி போலீசாருடன் தகராற்றில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்து ஆயிரம் விளக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் தி.நகரைச் சேர்ந்த வில்லியம் அலெக்சாண்டர்(34) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சினிமா தயாரிப்பாளராக என்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
தி.நகரில் நேற்றிரவு வில்லியம்ஸ் அலெக்ஸாண்டர் தனது நண்பர்களான ராகேஷ் மற்றும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோருடன் புத்தாண்டு விருந்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அவர்களை வீட்டில் விடுவதற்காக வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். மேலும், வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் வாகனத்தை ஓட்டிவந்த சினிமா தயாரிப்பாளரான வில்லியம் அலெக்ஸாண்டரிடமிருந்து பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இன்று காலை வில்லியம் அலெக்சாண்டரின் தந்தை தாமஸ் என்பவர் நேரில் வந்து உரிய ஆவணங்களைக் கொடுத்து அபராதம் செலுத்தி சொகுசு காரை எடுத்துச் சென்றார்.
போக்குவரத்துக் காவலர்களிடம் மதுபோதையில் தரக்குறைவாக பேசி பிரச்சனை செய்த சினிமா தயாரிப்பாளரான வில்லியம் அலெக்சாண்டர் மீது ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், போலீசார் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Police, Crime | குற்றச் செய்திகள், Tamilnadu, Traffic Police