ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விபரீதத்தில் முடிந்த மாமியார் மருமகள் சண்டை - பெண் தீ வைத்து தற்கொலை

விபரீதத்தில் முடிந்த மாமியார் மருமகள் சண்டை - பெண் தீ வைத்து தற்கொலை

தற்கொலை

தற்கொலை

மாமியார் மருமகள் சண்டையில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாங்காடு அருகே மாமியார் -மருமகள் சண்டையில் மாமியார்  தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டார்.

சென்னை அடுத்த மாங்காடு ஈவிபி அவென்யூ பாரதியார் தெரு சின்ன கொளத்தூவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரன். இவர் தனது தாய் கிரிஜா (வயது 61) மனைவி அனுஷ்யா தேவி ஆகியோருடன் வசித்து வருகிறார். மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Also Read:  காதலனுடன் இளம்பெண் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சித்தப்பா - சித்தியால் வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

மருமகள் கோபத்தில் மாமியார் கிரிஜாவை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்தவர் வீட்டில் கேனில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அதனை தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். உடலில் பற்றி எரியும் தீயுடன் சாலையில் வந்து  விழுந்துள்ளார். உடல் முழுவதும் தீயில் எரிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாமியார் மருமகள் சண்டையில் மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சோமசுந்தரம் 

First published:

Tags: Crime News, Death, Police