ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் பண மோசடி செய்த குடும்பம்- ரம்மி சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்ததாக வாக்குமூலம்

தனியார் நிறுவனத்தில் ரூ.47 லட்சம் பண மோசடி செய்த குடும்பம்- ரம்மி சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்ததாக வாக்குமூலம்

தனியார் நிறுவனத்தில் மோசடி செய்த குடும்பம்

தனியார் நிறுவனத்தில் மோசடி செய்த குடும்பம்

சென்னையில் தனியார் நிறுவனத்தில் சுமார் 47 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ரூபாய் 47 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட குடும்பம் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

  சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர்  திரவிய சுந்தரம் ( வயது 63). இவர் சென்னை தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள விபிஎம்ஏ பருப்பு கம்பெணியில் 18 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் தனது மகனான  தீபன்ராஜை 2014  ஆம் ஆண்டு வேலைக்கு சேர்த்து உள்ளார். பருப்பு வியாபாரம்  செய்யும் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த இவர் விற்பனைக்காக பல மாவட்டங்களுக்கு சென்று வருவார்.

  Also Read:  ப்ளஸ் டூ மாணவிக்கு ஆபாச மெசேஜ்.. ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

  இதே நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக கணக்காளராக  பணிபுரிந்து வந்த யுவராணி(32) என்பவருக்கும் தீபன்ராஜ் இடையே காதல் மலர்ந்தது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தந்தை , கணவன் ,மனைவி மூவரும் போலி இரசீதுகள் தயாரித்து போலி கணக்கு வழக்குகள் காட்டி பல இலட்சம் மோசடி செய்து வந்தது நிறுவனத்திற்கு  தெரியவந்தது. இதனையடுத்து அந்த குடும்பத்தினர் தலைமறைவாகினர்.இதனையடுத்து விபிஎம்ஏ   பருப்பு கம்பெனியின் சார்பாக இராஜகணேஷ் என்பவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த மாதம் 5ஆம் தேதி புகாரளித்துள்ளார்.

  Also Read: 5 பிள்ளைய பெத்து என்ன?.. இடிந்துபோன வீட்டில் வாழ்க்கையை கழிக்கும் மூதாட்டியின் கண்ணீர் கதை

  புகாரை பெற்றுக்கொண்ட வடசென்னை காவல் துணை ஆனையர் சிவபிரசாத் அவரது தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தார். இதனையடுத்து  தலைமறைவான மூவரும் சென்னையில் பாரிமுனையில் தங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 செல்போன் 3 சிம்காடுகள் மற்றும் 30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மோசடி பணம் முழுவதையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்ததாக தீபன்ராஜ் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுர்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: அசோக் குமார்

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cheating case, Crime News, Money