செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் இன்று மதியம் ஒன்றரை மணி அளவில் சுமார் 500 கனஅடி அளவுக்கு வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2935 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் மழைநீர் பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது.
இங்கிருந்து சென்னை குடிநீருக்கு 106 கன அடி தண்ணீரும் சிப்காட் தேவைக்கு 3 கன அடி தண்ணீரும் அனுப்பப்பட்டு வரும் நிலையில் ஏரியின் மொத்த உயரம் 24 அடியில் தற்பொழுது 21.40 அடி அளவில் நீர் மட்டம் நெருங்கியதால் செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று மணி 1.30 மணியளவில் சுமார் 500 கன அடி அளவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இது தொடர்பாக தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540. மற்றும் தொலைபேசி எண்.- 1913-லும், , தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் குன்றத்தூர் வட்டாட்சியர் ஆகியோர் மூலம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு பெருமழை பாதிப்பின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட சமயத்தில் தென் சென்னையில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது.அதேபோன்று இந்த முறை பாதிப்பு இருக்காது என்றும் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த போதிலும் 500 முதல் ஆயிரம் கன அடி அளவிற்கு மட்டுமே படிப்படியாக உபரி நீர் வெளியேற்றும் அளவை உயர்த்தி அடையாற்றில் தண்ணீரை திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Adayar, Chennai, Heavy rain, Lake, Sembarambakkam