கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும்: அமைச்சர் நாசர் உறுதி

பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா  4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதை வென்று காட்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடு தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த துவக்க விழா நடைபெற்றது. மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

  முன்னதாக ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா  4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினர்.

  இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர்,
  திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருவதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

  மேலும் கொரோனா 3ம் அலை வந்தாலும் தமிழக அரசு அதனை வென்று காட்டும்  என்று அவர் உறுதியுடன் கூறினார்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: