மீனவர் வலையில் சிக்கிய 18 அடி ராட்சத உளுவை மீன்!

வலையில் சிக்கிய ராட்சத உளுவை மீன்

உளுவை மீனை கரைக்கு இழுத்து வருவது சட்டப்படி குற்றம் என்பதால் அதனை மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டனர்

 • Share this:
  சென்னை எண்ணூரில் மீனவர்  வீசிய வலையில் சீக்கிய 18 அடி  அரிய வகை உளுவை மீன் பத்திரமாக மீண்டும் கடலில் விடப்பட்டது.

  தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதாலும்  மீன்பிடி தடை காலம் என்பதாலும் பெரிய விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதால் பைபர் மற்றும் கட்டுமரங்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்துஎண்ணூர் நெட்டுகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் இரண்டு பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

  நெட்டுக்குப்பம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் கடலில் வலை வீசி மீன்களுக்காக காத்துக் கொண்டிருந்தபோது 18 அடி உள்ள அரிய வகை உளுவை மீன் ஒன்று வலையில் சிக்கியது. இந்த அரியவகை உளுவை  கடல் மிருகம் என்றும் அழைக்கப்படும்.

  உளுவை மீனை பார்த்த மீனவர்கள், அதனை கட்டி கரைக்கு இழுத்து வர கூடாது என்றும் சட்டப்படி இது குற்றம் என்பதால் மீனுக்கு எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் மீனவர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வலையை அறுத்து உயிரை பணையம் வைத்து உளுவை மீனை மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர்

  மேலும் படிக்க.. நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

  இது போன்ற மீன்கள் விசைப்படகை கவிழ்க்க கூடிய திறன் கொண்டது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

  செய்தியாளர்:அசோக்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: