• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ஏசிக்குள் இருந்து வந்த நல்லபாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு!

சென்னையில் ஏசிக்குள் இருந்து வந்த நல்லபாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு!

சென்னையில் ஏசிக்குள் இருந்து வந்த நல்லபாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு!

சென்னையில் ஏசிக்குள் இருந்து வந்த நல்லபாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு!

சென்னை பள்ளிக்கரணையில் ஏசிக்குள் இருந்து வந்த நல்லபாம்பு கடித்து முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை பள்ளிக்கரணை வ.ஊ.சி தெரு சிண்டிகேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஶ்ரீதரன்(66) அவரது மனைவி, மகன் மற்றும் மகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் ஶ்ரீதரன் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து இறந்து போன எலியானது கட்டில் மேலே விழுந்துள்ளது. பின்னர் ஶ்ரீதரன் அந்த ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

    அப்போது உள்ளே ஏதோ தென்பட, அது மின்சார வயர் என்று கையை வைத்து இழுத்துள்ளார். ஆனால் உள்ளே இருந்தது மின்சார வயர் இல்லை கொடிய விஷம் வாய்ந்த நல்லபாம்பு அவரது கையின் 2 விரலில் கொத்தியுள்ளது.

    பின்னர் அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

    அங்கு அவரை அனுமதிக்க மறுத்ததால் அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் மாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொண்ட பின்னர் உடலை குரோம்பபேட்டை அர மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, முதியவர் ஶ்ரீதரனை கடித்த நல்லபாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துச்சென்றனர்.

    செய்தியாளர் -  ப.வினோத் கண்ணன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: