• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தி.மு.க அரசு மெத்தனத்தால் சென்னை வெள்ளம் - கொளத்தூரில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க அரசு மெத்தனத்தால் சென்னை வெள்ளம் - கொளத்தூரில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Youtube Video

தி.மு.க அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் மழை பாதித்த பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களுடன் இணைந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘சென்னையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குடிநீர், உணவு கிடைக்காத சூழல் உள்ளது. மின்சாரம் தடைபட்டுள்ளது. போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் உள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    அ.தி.மு.க ஆட்சி அமைந்தபிறகுதான் சென்னை மாநகர மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தோம். ஜெயலலிதா இருக்கும்போதும் அவர் மறைந்தபிறகும் சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தோம். 1,385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு, கூவம் ஒருங்கிணைந்த மழை வடிகால் வசதி 406 கி.மீ தூரத்துக்கு செய்த அரசு அ.தி.மு.க அரசு.

    அதனால், அந்தப் பகுதிகளில் மழை பெய்தும் தண்ணீர் தேங்காமல் உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான வடிகால் வசதி செய்ததன் காரணத்தால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் சரியான முறையில் செயல்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், சென்னையின் மேயராக மு.க.ஸ்டாலின் 5 ஆண்டுகள் இருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சுப்ரமணியன் மேயராக இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் என்ன நன்மைகள் செய்தார்கள்.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வடிவதற்கான வசதிகளை செய்ய முடியவில்லை. அதன் காரணமாகத்தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக ஸ்டாலின் கூறுவது அவதூறு’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: