சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்!

காட்சி புகைப்படம்

சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த 179 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 • Share this:
  சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானத்தில் திடீர் என்ஜின் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த 179 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாயிக்கு சிறப்பு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 172 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் சென்றனர். விமானம் நடுவானில் பறந்து சென்றபோது திடீரென ஒரு என்ஜீனில் பழுது ஏற்பட்டது. இதை கண்ட விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது. இதனால் சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

  இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடத்திற்கு பின் துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. விமானி சமர்த்தியமாக செயல்பட்டதால் விமானத்தில் பயணம் செய்த 179 பேரும் அதுஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பயணிகள் வேறு விமானத்தில் துபாய் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: