சென்னை கொரட்டூர் TVS நகரில் நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், புகாரை விசாரிக்க வந்த காவலர்களையும் தாக்கியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரை ஆபாசமாக பேசும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் கொரட்டூர் கெனால் சாலை TVS நகர் அருகே காவல் துறையினர் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 2.45 மணிக்கு கெனால் சாலையில் காரில் வந்த இரண்டு பேர் சண்டை போட்டு கொண்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு புகார் வந்தது. அப்பொழுது சம்பவ இடத்திற்கு நேரில் விசாரிக்க சென்ற தலைமை காவலர் சீனிவாசன், காவலர் ஆகாஷ்-ஐ ஆகிய இருவரையும் அவர்கள் இருவரும் ஆபாச வார்த்தைகளால் பேசியும் குடிபோதையில் காவலர்களை தாக்கி விட்டு தப்பியோடினர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பொழுது வாகன எண் மற்றும் முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சியாமளா பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன்கள் தீபக் ராஜ் (வயது 21) , ஜீவத் ராஜ் (வயது 19) த/பெ ரவிச்சந்திரன் என்பது தெரியவந்தது. இருவரும் SRM கல்லூரியில் படித்து வரும் நிலையில் நள்ளிரவில் குடிபோதையில் காரில் ஊரை சுற்றி விட்டு இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின் அதை விசாரிக்க வந்த காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக உண்மையை ஒப்புக் கொண்டனர்.
தலைமை காவலர் சீனிவாசன் தாக்கப்பட்டதில் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் இருவரையும் கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் சந்தோஷ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிகிச்சை பெறும் போலீசார்..
இளைஞர்கள் குடிபோதையில் செய்த அட்டகாசத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்த காவலர் ஆகாஷ்பாபுவை ஆபாசமாகப் பேசி இருவரும் தாக்கினர் என்று கூறப்படுகிறது மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர் : கன்னியப்பன் (அம்பத்தூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.