Home /News /tamil-nadu /

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை

காய்கறி விலை நிலவரம்

காய்கறி விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனையாகிறது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களின் விலை 100 ரூபாயை நெருங்குகிறது.

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று இறக்குமதி செய்யப்ட்ட தக்காளி பெருமளவில் விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது.

    இதன் காரணமாக தக்காளி தேக்கமடையாமல் தடுக்க நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி பெங்களூரு தக்காளி கிலோ 90 ரூபாய்-க்கும் நாட்டு தக்காளி 85 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் கத்திரிக்காய், வெங்காயம், வெண்டைக்காய் உள்ளிட்டவைகளின் விலை 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. அதன்படி உஜாலா கத்தரிக்காய் கிலோ 80 ரூபாய்-க்கும், வெண்டைக்காய் 70 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 வது நாளாக 100 ரூபாய்க்கு அதிகமாக 1 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக விலையிலிருந்து அத்தியாவசிய காய்கறிகள் 10 ரூபாய் குறைந்துள்ளது.

    இன்று மொத்த 42 வாகனத்தில் 630 டன் தக்காளி சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு வந்துள்ளது. அதேபோல் இதர அத்தியாவசிய காய்கறிகள் மொத்தம் 5000 டன் தேவை உள்ள நிலையில் 2000 டன் இன்று வரத்து குறைந்து 3000 டன் மட்டுமே வந்துள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

    முருங்கைக்காய் 180 க்கும், உஜாலா கத்திரிக்காய் 1 கிலோ 80, நாட்டுத் தக்காளி கிலோ 80 க்கும், வெங்காயம் 36 ,வெண்டைக்காய் 70 க்கும், அவரைக்காய் 80 க்கும், கருவேப்பிலை 1கட்டு 50 க்கும், பீர்க்கன்க்காய் மற்றும் கோவைக்காய் 50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கீரை வகைகள் முற்றிலும் வரத்து குறைவால் ஒரு கட்டு 40 ரூபாய்க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : இந்தியாவில் நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி? : இன்று ஆலோசனை

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (06.12.2021) காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்,

    வெங்காயம் 36/30/26

    நவீன் தக்காளி 90/85

    நாட்டு தக்காளி 85/80

    உருளை 26/22/18

    சின்ன வெங்காயம் 60/50/45

    ஊட்டி கேரட் 70/60/55

    பெங்களூர் கேரட் 50

    பீன்ஸ் 70/65

    பீட்ரூட். ஊட்டி 55/50

    கர்நாடக பீட்ரூட் 35/25

    சவ் சவ் 25/22

    முள்ளங்கி 40 /30

    முட்டை கோஸ் 40/35

    வெண்டைக்காய் 60/50

    உஜாலா கத்திரிக்காய் 80/70

    வரி கத்திரி 50/54

    காராமணி 65

    பாவக்காய் 50/40

    புடலங்காய் 50/45

    சுரக்காய் 35/30

    சேனைக்கிழங்கி 18/16

    முருங்ககாய் 180/150

    சேம கிழங்கு 25/15

    காலிபிளவர் 40/35

    வெள்ளரிக்காய் 20/18

    பச்சை மிளகாய் 30/25

    பட்டாணி 50/40

    இஞ்சி 60/30

    பூண்டு 60/90/130

    அவரைக்காய் 80/70

    மஞ்சள் பூசணி 15

    வெள்ளை பூசனி.20

    பீர்க்கங்காய் 60/50

    எலுமிச்சை 40

    நூக்கள் 70

    கோவைக்காய் 60/50

    கொத்தவரங்காய் 50

    வாழைக்காய் 6/5

    வாழைதண்டு,மரம் 40

    வாழைப்பூ 15

    பச்சைகுடமிளகாய் 70/60

    வண்ண குடமிளகாய்.250

    கொத்தமல்லி 4

    புதினா 6

    கருவேப்பிலை 50

    அனைத்து கீரை.40/35

    தேங்காய் . 34/36
    Published by:Suresh V
    First published:

    Tags: Koyambedu Market, Tomato

    அடுத்த செய்தி