ரஜினி தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மேடையில் தேசிய விருது பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் தனுஷ் கூறினார்.
அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான விருது டெல்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். டெல்லியில் விருது பெற்று விட்டு விமானத்தில் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் தனுஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி தாதா சாகேப் பால்கே விருது வாங்கும் மேடையில் நானும் தேசிய விருது வாங்கியது பெருமையாகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
அடுத்த படம் மாறன் தான்.வெற்றிமாறனும் நானும் தொடர்ந்து நிறைய படங்கள் பண்ணி கொண்டு வருகிறோம். எல்லா படங்களும் வெற்றியையும் வரவேற்பையும் எல்லா தரப்பிலும் பெற்று வருகிறது. 2 தேசிய விருதுகளும் வெற்றிமாறன் தந்த கதாபாத்திரம் முலமாக தான் கிடைத்து உள்ளது. வெற்றிமாறனுக்கும் தாணுவிற்கும் தேசிய விருது குழுவிற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
செய்தியாளர்: சுரேஷ்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.