Home /News /tamil-nadu /

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய நாய்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

சென்னையில் சிறுமியை கடித்து குதறிய நாய்.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுமி நடந்த விபத்தில் மனதளவில் மிக கடுமையாக பலவீனமடைந்துள்ள நிலையில் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை நொளம்பூரில் சென்ற 9 வயது சிறுமியை விரட்டி சென்று கை , கால் , முதுகு என உடலில்  18 இடத்தில் நாய் கடித்து குதறியது.

    சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் வைரவன்(44) இவரது 9 வயது மகள் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4ஆம்  வருப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 9 வயது சிறுமி தனது வீட்டு அருகே தனியார் அடுக்குமாடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அப்போது அங்கு இருந்த வீட்டில் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்ட்  நாய் தீடீர் என்று சிறுமியை விரட்டி சென்று கை , கால் , முதுகு ஆகிய பகுதியில் 16 இடத்தில் கடித்து குதறியது.

    Also Read: அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    இதை பார்த்த பொது மக்கள் ஒடி வந்து அந்த நாயை துரத்தி விட்டு படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை வைரவன் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் நாயின் எஜமானர் விஜயலட்சுமி என்பவரை விசாரித்து காவல் நிலைய சொந்த ஜாமீனில் வெளியேவிட்டனர்.

    நாய் சிறுமியை தாக்கும் காட்சிகள்


    இந்நிலையில் குழந்தைகள் அதிகம் விளையாடும் அடுக்குமாடி குடியிருப்பு பூங்கா பகுதியில் சிறுமியை விரட்டி சென்று நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்நிலையில் குழந்தையை கடித்த நாயை இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்யவில்லை நாயின் எஜமானன் வீட்டில் உள்ளதால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

    செய்தியாளர்: கன்னியப்பன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Dog, Girl Child, Tamil News, Tamilnadu

    அடுத்த செய்தி