சென்னை அருகே நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலம் நாயின் உடலில் இருந்து குண்டை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
சென்னையை அடுத்த சித்தலப்பாக்கம் சங்கராபுரம் 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (37) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் சிக் குக் என்ற பெயரில் நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை ஶ்ரீதர் வேலைக்கு செல்லும்போது சிக் குக் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளது. கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என்று நினைத்த ஶ்ரீதர் வேலைக்கு சென்று விட்டார்.
பின்னர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்தபோது நாயின் உடலில் ரத்தம் நிற்காமல் வந்த வண்ணம் உள்ளதை பார்த்த ஸ்ரீதர் உடனடியாக அந்த நாயை மீட்டு அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.ரத்தம் நிற்காமல் வந்ததால் உள்ளே காயம் ஏதேனும் உள்ளதா என்பதை பரிசோதிக்க ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நாய்க்கு ரத்தம் வந்த இடத்தை ஸ்கேன் எடுத்துள்ளனர். ஸ்கேன் ரிசல்ட்டில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் சிரிய ரக தோட்டா (துப்பாக்கி குண்டு) இருந்ததை கண்டு மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வேளச்சேரியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை நாய்க்கு அருவை சிகிச்சை செய்து உடலில் இருந்த தோட்டாவை வெளியே எடுத்து தையலும் போட்டுள்ளனர்.பின்னர் தொடர்ந்து நாயை பராமரித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து ஸ்ரீதர் நேற்று பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்தார். அதனுடன் நாயின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டவையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பெரும்பாக்கம் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் அலட்சியம் காட்சி வருகின்றனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டின் மாடியிலிருந்து நாய் ஒன்றை தூக்கி வீசியவரை சிறையில் அடைத்த நிலையில் நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக புகார் அளித்தும் பெரும்பாக்கம் போலீசார் மெத்தனமாக செயல்பட்டு அலட்சியம் காட்டி வருகின்றனர். நாய் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.