கொரோனா எங்கும் போகவில்லை... சென்னையில் அதிகரிக்கும் தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை

மாதிரிப் படம்

சென்னையில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கிறது என்றும் கொரோனா நம்மை விட்டு எங்கும் போகவில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது. எனவே இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முடியவில்லை என்றும் எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென உயரலாம் என்றும் கவனத்துடன் பொதுமக்கள் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சென்னையில் ஜூலை 1ம் தேதி ஒரு நாளுக்கு 249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு தினசரி தொற்றார்கள் எண்ணிக்கை ஜூலை 17ம் தேதி வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. ஜூலை 17ம் தேதி 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜூலை 18ம் தேதி 13 பேருக்கு பாதிப்பு அதிகமாகி 150 என தினசரி புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன்பிறகு மீண்டும் எட்டு நாட்கள் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 26ம் தேதி 122 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஜூலை 27ம் தேதி 17 பேருக்கு கூடுதலாக 139 என பாதிப்பு அதிகரித்து. 28ம் தேதி 25பேருக்கு கூடுதலாக என 164 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

Also read... சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

இது குறித்து நுரையீரல் நிபுணர் ஜெயராமன் கூறுகையில், "இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை. அண்டை மாநிலமான கேரளாவில் பாதிப்பு அதிகரித்துள்ளது போல எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டிலும் அதிகரிக்கலாம். பண்டிகை காலமான அக்டோபர் மாதத்தை ஒட்டி பாதிப்பு மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே முக கவசம் அணிதல், கை கழுவுதல், தனி மனித இடைவெளி கடைப்பிடிப்பது மிக அவசியமாகும்" என்கிறார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கமாக மெல்ல அதிகரித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி பேசும் போது, "பத்துக்கு கீழ் இருந்த தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தை ஒப்பிடும் போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்றாலும் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. கொரோனா நம்மை விட்டு எங்கும் போகவில்லை, இங்கேயே தான் இருக்கிறது. விழாக்கள், நிகழ்வுகள், வணிக வளாகங்களில் கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்த்தால் தான் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கும்" என்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: