• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி

 அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம்: சென்னை மாநகராட்சி

அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    சென்னை அரும்பாக்கம் ஆர்கே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக குடிசையில் வசித்து வருகின்றனர். கரையோரம் இருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஏற்படும் அபாயகரமான சூழலை தடுக்கும் வகையில், அந்த மக்களை மாற்று குடியிருப்புக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    Also read: திமுக ஆட்சிக்கு வந்தாலே சென்னையைச் சிங்காரிக்கிறோம் என்று கிளம்பிவிடுவார்கள்: டிடிவி தினகரன் சாடல்

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை அரும்பாக்கம்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ கூவம்‌ நதிக்கரையோரம்‌ இருந்த 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்‌ அகற்றப்பட்டு தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில்‌ பாதுகாப்பாக மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்‌.

    நீர்நிலைகளின்‌ கரையோரங்களில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்‌ ஒரு பசூதியாக பெருநகர சென்னை மாநகராட்‌ சி, அண்ணாநகர்‌ மண்டலம்‌, அரும்பாக்கம்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ கூவம்‌ நதிக்கரையோரம்‌ 243 குடியிருப்புகள்‌ ஆக்கிரமிப்புகள்‌ என கண்டறியப்பட்டு
    அவற்றை அகற்ற மாநகராட்சியின்‌ சார்பில்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன. இவர்களில்‌ 93 ஆக்கிரமிப்பு குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்று வாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    மீதமுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கும்‌ தமிழ்நாடு குடிசைப்‌ பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பாக மறுகுடியமர்த்தப்படுவார்கள்‌. மேலும்‌ ராதாகிருஷ்ணன்‌ நகர்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்படும்போது பொதுமக்கள்‌ அளித்த கோரிக்கை மனுக்கள்‌ பரிசீலிக்கப்பட்டு தரூதியுள்ள நபர்களுக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தமிழ்நாடு சூடிசைப்‌ பகுதி மாற்றுவாரிய குடியிருப்பில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே, ஆக்கிரமிப்பு பகுதியில்‌ கூடியிருக்கும்‌ எஞ்சிய மக்கள்‌ அனைவருக்கும்‌ தமிழ்நாடு குடிசைப்‌ பசூதி மாற்று வாரிய குடியிருப்புகளில்‌ வீடுகள்‌ ஒதுக்கீடு பெறப்பட்டு முறையாக மறுகுடியமர்வு செய்யப்படும்‌ வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என பொதுப்பணித்துறைக்கு மாநகராட்‌ சியின்‌ சார்பில்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: